New offer Flipkart Warranty Assistant Rs 99
Flipkart நிறுவனம் தனது இணையதளத்தில் மொபைல் போன் வாங்குவதற்கு புதிய வாரண்டி அசிஸ்டன்ட் சேவையை அறிவித்துள்ளது. flipkart வாரண்டி அசிஸ்டன்ட் சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களில் உள்ள உற்பத்தி குறைபாடுகள் மென்பொருள் மற்றும் வன்பொருள் கோளாறுகளை வாரண்ட்யின் கீழ் சரிசெய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. Flipkart Website புதிய மொபைல் போன் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெற முடியும். இந்த சலுகைகளை பிராண்ட் அறிவிக்கும் வாரண்டி கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. Flipkart Warranty Assistant ரூபாய் 99 என்ற விலையில் நமக்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற மொபைல் போன் வாங்கும்போது Flipkart தளத்தில் தேர்வு செய்யவேண்டும். சேவையில் Flipkart வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு வந்து மொபைல்களை பெற்று அதனை சரிசெய்து வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் வேளையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களது போன்களை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற விடாமல் சரி செய்து தருவதாக Flipkart அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
உங்களுடைய கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க நன்றி வணக்கம்
No comments:
Post a Comment