2020 பத்திரப்பதிவு துறை வருவாய் உயருமா?Registration Department - Tech News

You Can Find All Information

Popular Posts

Tuesday, June 16, 2020

2020 பத்திரப்பதிவு துறை வருவாய் உயருமா?Registration Department

2020 பத்திரப்பதிவு துறை வருவாய் உயருமா?Registration Department

Registration Department

                           ஊரடங்கால் பத்திரப்பதிவு பணிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி வருவாய் ஈட்ட முடியாமல் பதிவுத்துறை தவித்து வருகின்றது. இதனால் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பு குளறுபடி காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக வருவாய் இலக்கை எட்ட முடியாமல் தமிழக பதிவுத்துறை தவித்து வந்தது.அரசின் சில அதிரடி நடவடிக்கைகள் காரணமாக 2018-19 முதல் வருவாய் இலக்கை எட்டும் நிலைக்கு வந்தது இந்த நிலையில் 2019-20 ஆம் ஆண்டில் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்தது 2020 21 ஆம் நிதியாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 26 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை பத்திரப்பதிவு பணிகள் நிறுத்தப்பட்டு இதற்கு பிறகு ஏப்ரல் 20ஆம் தேதி அலுவலகங்கள் திறக்கப்பட்டன.


இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                            பொதுமக்கள் வழக்கம்போல பத்திர பதிவுக்கு வருவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை இதனால் வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலைக்கு பதிவுத்துறை தள்ளப்பட்டுள்ளது.தமிழக அரசு நிர்ணயித்த இலக்கு பணி ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 2416 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் பத்திரங்கள் வருகை சரிந்ததால் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டுவதற்கு தள்ளாடும் ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி பத்திரப்பதிவு வாயிலாகவே நமக்கு கிடைக்கிறது அதில் ஏற்பட்டுள்ள சரிவு வளர்ச்சித் திட்டங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனவே பத்திரப்பதிவை அதிகரிக்க அரசு புதிய சலுகைகளை அறிவிக்க முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்..........



இது குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ணுங்க

No comments:

Popular Posts

Subscribe Us