ஐஐடி பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை நிரந்திரமாக மாற்ற மத்திய அரசை மென்பொருள் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து இந்திய மென்பொருள் பூங்காக்கள் சங்கம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.இதில் குறிப்பிட்ட சதவிகித பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட பிற விதிகள் கொரோனா காலத்திற்குப் பின்பும் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகால திட்டங்களை நிறுவனங்கள் வகுக்க முடிவதுடன் பணியாளர்களின் தேவைக்கேற்ப வேலை செய்ய அனுமதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. மென்பொருள் நிறுவனங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இத்துடன் இந்த செய்தி முடிந்து விட்டது இனிமேல் வரும் செய்திகளை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த வலைத்தள பக்கத்தை பாலோ பண்ணிக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment