தமிழ் போஸ்டர் பார்வையாளருக்கு வணக்கம்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித் தனியாகச் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் கலந்தாய்வு போன்று கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. கடந்த ஓராண்டாக இதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தது.இந்த சூழ்நிலையில் இந்த முயற்சியை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்துவதற்கான முடிவை தமிழக அரசு தற்போது கிடைத்துள்ளது தொடர்ந்து இந்த ஆண்டு முதலே ஆன்லைன் மூலமாகவே தமிழகத்தை கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மாணவர்கள் சேர்க்கை இணையதளம் தொடங்கி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெவ்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்தால் இரண்டு கல்லூரிகளிலும் நடைபெறும் நேர்காணலை சந்திக்க நேரிடும் சூழல் என்பது இந்த ஆன்லைன் விண்ணப்பம் மூலமாகவும் கலந்தாய்வு மூலமாகவும் தவிர்க் கப்பட உள்ளது. எனவே ஒற்றை சாளர ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக ஒரே நேரத்தில் பல விருப்ப கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய பலனும் மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இது ஒரு நல்ல முயற்சிதான் இது குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ணுங்க ஆன்லைன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணையதளம் பற்றிய அடுத்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
No comments:
Post a Comment