+12 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு(Chemistry and accountancy)
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வை தவற விட்டு அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து மாணவர்கள் தலைமை ஆசிரியர்களிடம் கடிதம் வழங்க வேண்டும். மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் குறித்த விவரங்களை வரும் 24-ம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார். இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
உங்களுடைய கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க நன்றி வணக்கம்
No comments:
Post a Comment