ஒரு கிராமத்தில் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது என்னைக் காப்பாற்று! காப்பாற்று! என்று ஓர் அலறல் சத்தம் ஆற்றோர தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. "மாட்டேன்" உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய் காப்பாற்ற மாட்டேன் என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன் என்னை காப்பாற்று என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். வலையை அறுத்து முடிப்பதற்குள் சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை` பாவி முதலையே இது நியாயமா என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க அதற்கு என்ன செய்வது பசி வந்தால் பத்தும் பறந்து விடும் இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு அவனை விழுங்க ஆரம்பித்தது. முதலை சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை முதலை ஏன் மாற்றியதோடு மட்டுமல்லாமல் நன்றி கெட்ட தனத்தை இதுதான் உலகம் என்று சொல்வது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பறவைகள்
மரத்தில் இருக்கும் பறவைகளைப் பார்த்துக் கேட்கிறான் இது தான் உலகமா என்று அதற்கு பறவைகள் "ஆம்" எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் மூட்டை விடுகிறோம் ஆனால் பாம்புகள் வந்து முட்டைகளை குடித்து விடுகின்றன. அதற்கு பறவைகள் இது தான் உலகம் என்று சொல்கின்றனர்.
கழுதைகள்
அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளின் பார்த்துக் கேட்கிறான் இது தான் உலகமா என்று அதற்கு கழுதைகள் "ஆம்" என்று சொல்கின்றன. நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் எங்களை அதிகப்படியான சுமைகளை சுமக்க செய்து அடித்து சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி நடை தளர்ந்த உடன் தீனி போட முடியாது என்று எங்களை துரத்தி விடுகிறார்கள் மனிதர்கள் ஆகையால் முதலை சொல்வது சரிதான் இதுதான் உலகம் என்றன கழுதைகள்.
ஆடுகள்
அங்கிருந்த ஆடுகளைப் பார்த்து கேட்கிறார் இது தான் உலகமா அதற்கு ஆடுகளம் ஆம் எங்களுக்கு இறை போட்டு வளர்ப்பவர்களை எங்களை இறக்கி கொள்வதால் முதலை சொல்வது சரிதான் என அவைகளும் ஆமோதி கின்றன.
முயல்
கடைசியாக அங்கு தூரத்தில் ஒரு முயலைப் பார்த்து கேட்கிறார் இது தான் உலகமா அதற்கு முயல் இல்லை இதுவல்ல உலகம் முதலை பிதற்று கிறது என்று சொல்ல முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. நீ சிறு முயல் உனக்கு என்ன தெரியும் என்று முதலை சொல்ல நீ பேசுவது எனக்கு சரியாக புரியவில்லை தெளிவாக பேசு என்றது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடி விடுவான் என்ற முதலையை பார்த்து முயல் பெரிதாக சிரித்தது. உன் வாழை வைத்து அவனை அடித்து விட முடியாதா ஒரே அடியில் அவனை நீ வீழ்த்தி விட முடியும் என்றவுடன் முதலை கர்வத்துடன் சிறுவனின் காலை விட்டு விட்டு இது தான் உலகம் என பேசத் துவங்கியது முயல். சிறுவனைப் பார்த்து முயல் நிற்காதே ஓடி விடு என்றது. தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுகிறான் சிறுவன். அவனை வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாக போய் விடுகின்றது. வலையில் சிக்கியிருந்த வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது அப்போதுதான் முதலைக்கு நினைவுக்கு வருகிறது கோபத்துடன் முயலை பார்க்க புரிந்ததா "இதுதான் உலகம்" "இதுதான் வாழ்க்கை" என்றது முயல் தப்பி ஓடிய சிறுவன் தனது கிராமத்தினரை அழைத்து அங்கு வர அவர்கள் முதலையை அடித்தே கொன்று விடுகின்றன. அப்போது சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய் ஒன்று அந்த புத்திசாலி முயலைபாய்ந்து பிடித்து விடுகின்றன சிறுவன் அதை காப்பாற்றுவதற்கு முயலை நாய் கொன்றுவிடுகிறது.உயிராக வளர்த்ததன் நாய் தான் என்றாலும் இதுதான் உயிரை காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டது. முயலை நாய் கொன்றுவிட்டதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டி விடுகின்றார்.உதவி செய்தவர்களுக்கு உபத்திரம் ஏற்படுவதும் நேசித்த வழிகளையே வெறுக்க நேரிடுவதும் அவனைக் குழப்பி விடுகிறது. இது தான் உலகமா ? இது தான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை முன்னுக்குப் பின் முரணாகவும் எதிரும் புதிருமான நிகழ்வு தான் வாழ்க்கை அடுத்த நொடி களின் நடக்க இருப்பது அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறிய முடியாமல் இருப்பது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது புரிய வைக்க முடியாது எதிர் வருவதை எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு முன்னேறுவது தான் வாழ்க்கை
உயர்ந்து காட்டுவோம் இது உங்கள் தமிழ் போஸ்டர்(TAMIL BOOSTER)
இது மாற்றம் சுவாரஸ்யமான மற்றும் ரகசியமான மற்றும் அமானுஷ்யமான நிகழ்வுகளையும் உண்மை நிகழ்வுகளையும் செய்திகளையும் போன்ற பல்வேறு நிகழ்வுகளையும் இந்த வலை தளத்தில் காணலாம் இந்த வலைதளத்தின் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்றவற்றை ஃபாலோ பண்ணுங்கள் நாங்க போன்ற ஒவ்வொரு பதிவுகளையும் நீங்கள் உடனடியாக பெற்றுக் கொள்வதற்கு அது பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் டெலிகிராம் யூஸ் செய்தால் அதற்கான லிங்க் கீழே கொடுத்துள்ளோம் லிங்க் இல்லை என்றால் நீங்கள் டெலிகிராமில் சர்ச் என்னும் ஆப்ஷனை பயன்படுத்தி தமிழ் பூஸ்டர் (TAMILBOOSTER)என்று டைப் செய்தால் உங்களுக்கு டெலிகிராம் தமிழ் பூஸ்டர் அக்கவுண்ட் கிடைத்துவிடும் ஓகே மீண்டும் நல்ல ஒரு பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்
No comments:
Post a Comment