சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த இரண்டு வாரங்களாக சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் தினமும் சராசரியாக 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லூரிகள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் ரயில் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்து மாணவர் விடுதிகளை சென்னை மாநகராட்சிக்கு வரும் ஜூன் 20ம் தேதி ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஜிவி பிரகாஷ் அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அப்படி ஒப்படைக்க வில்லை என்றால் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் ஓரிரு நாட்களில் எப்படி மாணவர் விடுதிகளில் ஒப்படைக்க முடியும் என்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்று இருந்தாலும் அவர்களது உடமைகள் பூட்டப்பட்ட மாணவர் விடுதிகளின் அறைகளில் உள்ளது அவற்றை மாணவர்கள் அனுமதி இல்லாமல் எப்படி திறந்து விடுதிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான முடிவு நாளை மாலைக்குள் தெரிந்துவிடும் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகள் ஒப்படைக்கப்படுமா அல்லது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தெரிந்துவிடும் இதை காண நீங்கள் இந்த வலைப்பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்யவும்
உங்களுடைய கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க நன்றி வணக்கம்
No comments:
Post a Comment