கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி சேனல் மூலமாக பாடம் போதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வசதியை விட கல்வி சேனல் மூலமாக எளிதில் கல்வியை கொண்டு சேர்க்க முடியும் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதிகை உட்பட ஒரு சில சேனல்கள் மூலமாக கல்வி போதிக்கும் முடிவு செய்துள்ளார்கள். வகுப்புக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வகுப்பு வாரியாக பாடத்திட்டத்தை குறைக்க முதல்வர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வார காலத்தில் சமர்ப்பிக்கபடலாம் 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படும் எந்த வகுப்புக்கு எந்த பாட முக்கியமோ அந்த பாடங்களை மட்டுமே கொண்டு பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 71 லட்சம் மாணவ மாணவியருக்கு வகுப்பு மற்றும் பாடவாரியாக புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவுக்கு பின்பே அனுப்பப்பட்டுள்ள பாடபுத்தகத்தில் எந்த பாடங்களை தவிர்ப்பது எதை போதிக்கிறது என்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் .......
உங்களுடைய கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க நன்றி வணக்கம்
No comments:
Post a Comment