காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா? - Tech News

You Can Find All Information

Popular Posts

Wednesday, June 24, 2020

காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?

காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து காண்போம்

காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா? இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  விளக்கம்   தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு பாடங்கள் குறைப்பு என பள்ளிக்கல்வித் துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது அப்போது பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டு. இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள தகவல் இதோ பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 பேர் கொண்ட கல்வி குழு ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவினர் வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களில் எண்ணிக்கை குறையும்போது பாடத்திட்டங்களை எவ்வாறு குறுகிய காலத்தில் கற்றுக் கொடுப்பது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்க உள்ளனர். அந்த குழுவின் அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய் உள்ளது. அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிறகு அவருடைய ஒப்புதல் பெற்ற பிறகே பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் போது உள்ள சிக்கல்கள் குறித்தும் இந்த குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர் அதனையும் முதல்வர் அவர்களிடம் தெரிவிப்போம். வரும் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அதே நேரம் இது தொடர்பாக 18 பேர் கொண்ட கல்விக்குழு தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் தீவிர ஆலோசனைக்குப் பிறகு முடிவுகள் தெரிவிக்கப்படும். ஆன்-லைன் வழிக் கல்வியை முறைப் படுத்துவது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் தற்போது தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர் நீதிமன்ற வழக்கில் ஆன்-லைன் வழிக் கல்வி தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் இது குறித்து தற்போது ஆய்வு செய்து வருகின்றது. மத்திய அரசின் கருத்துக்கள் வந்ததும் இது குறித்து பரிசீலனை செய்து முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..........

No comments:

Popular Posts

Subscribe Us