பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க ஆண்டுதோறும் தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது அதன்படி 2019 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் வங்கிக்கணக்கு விபரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளமானemims பதிவேற்றம் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இதன் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்த சுமார் 5 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 107 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி வணக்கம்..............
No comments:
Post a Comment