கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும்தேர்வு எழுதாமலே தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் சூழ்நிலையில் முதலாமாண்டு இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் கிட்டத்தட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் தற்போது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தும் வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாகசெய்முறை தேர்வு மற்றும் நூல் மதிப்பீடு மதிப்பின் அடிப்படையில்மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தை அடுத்து மாற்ற பல்கலைக்கழகமும் இதேபோன்று அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ணுங்க
No comments:
Post a Comment