Tech News: TODAY NEWS

You Can Find All Information

Popular Posts

Showing posts with label TODAY NEWS. Show all posts
Showing posts with label TODAY NEWS. Show all posts

Thursday, May 27, 2021

Today Medical Tips

May 27, 2021 0

*இன்றைய மருத்துவம்

*உங்கள் நுரையீரல் நலமா?

*தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும் பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

*ஒரு காலில் மட்டும் வீக்கம், வலி என்று இருக்கின்றதா? உங்கள் காலில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த அடைப்பு சிறிது உடைத்து அந்த துகள் ரத்த ஓட்டத்தின் மூலமாக நுரையீரல் அடைந்து அங்குள்ள ரத்த குழாயினை அடைத்து கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம். மூச்சு விடுவதில் கடினம், நெஞ்சு வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

*உங்கள் நுரையீரலின் திறனை மேம்படுத்த மூச்சுப் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். பல்வேறு வகையான மூச்சுப்பயிற்சிகள் உள்ளன.

*உதரவிதான சுவாசம், இதழ்கள் குவிக்கும் சுவாசம், பிராணாயாமம் போன்றவற்றை நீங்கள் முயற்சிக்கலாம். மூச்சு சம்பந்தமான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் நுரையீரல் திறன் மேம்படும். இதனால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

*சரியான அளவு தண்ணீர் பருகுவது உடலின் மற்ற பகுதிகள் போல் நுரையீரலும் சிறப்பாக செயல்பட உதவும். எனவே உடல் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் நீர்ச்சத்துடன் இருப்பதால் நுரையீரலில் உள்ள ம்யூகோஸல் லைனிங் மெலிதாகி , நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும்.

*ஆம் , உங்கள் உட்காரும் நிலைக்கும், நுரையீரல் திறனுக்கும் தொடர்பு உள்ளது. சாய்வாக உட்கார்வதால் உங்கள் நுரையீரல் திறன் குறைகிறது. தவறான நிலையில் அமர்வதால் உங்கள் நுரையீரல் சுருங்கி சிறியதாக மாறுகிறது. எனவே உட்காரும்போது நேராக உட்காருங்கள்.

*ஒருவர் அதிக அளவு மன உளைச்சலில் இருந்தால் சதா சளி பாதிப்பு, கிருமி தாக்குதலுக்கு உள்ளாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

*நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்.

*ஆஸ்துமா தொல்லை இருந்தாலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

*இருமலில் ரத்தம் இருந்தால் உடனடி மருத்துவ கவனம் தேவை.

*திடீரென குரல் தடித்தோ, கரகரப்பாகவோ மாறினால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

*தொடர்ந்து எக்காரணமும் இன்றி பல வாரங்கள் மேல் கை வலி இருந்தால் மருத்துவ கவனம் தேவை.

*விரல் நகங்களில் நீல நிறம் தெரிந்தால் மருத்துவரை அணுகவும்.

*காரணம் இன்றி எடை குறைந்தாலும் நுரையீரல் பற்றிய கவனமும் தேவை.

*எப்பொழுதும் சோர்வாக இருந்தால் பல பரிசோதனை களோடு நுரையீரலுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.

*புகைப் பிடிப்பவராயின் முதலில் இந்த நொடியே அதனை விட்டு விடுங்கள்.

*பிளீச்சிங்பவுடர், தரைவிரிப்பு, வேக்கம் கிளீனர், வாஷ்பேஸின், வீட்டில் அடைந்த பகுதி, பூச்சுக் கொல்லிகள், பெயிண்ட் போன்றவை உங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பவை. அதனை ஜாக்கிரதையாக கையாளவும்.

*விரைவு தெளிவு எளிமை உங்கள்

Tamilbooster

Read More

Sunday, August 9, 2020

10,000 கடன் தர ஏற்பாடு, வட்டியை நீங்களே மானியமாக பெறலாம், சிறப்பு திட்டம்

August 09, 2020 0

  • தமிழக அரசு அறிவிப்பு e-pass உடனுக்குடன் வழங்கப்படும் மக்கள் மகிழ்ச்சி
  • ரூபாய் 10 ஆயிரம் கடன் தர ஏற்பாடு, வட்டியை நீங்களே மானியமாக பெறலாம், சிறப்பு திட்டம்
  • தமிழக அரசு ரூ 5,000 நிதியுதவி வழங்கப்படும் மக்கள் மகிழ்ச்சி
  • 2020 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சித் தகவல்கள்

Read More

Thursday, July 23, 2020

இன்றைய பெட்ரோல் விலை ரூ. 83.63, டீசல் விலை ரூ.78.6

July 23, 2020 0
சென்னையில் இன்று (ஜூலை 23), 

பெட்ரோல் விலை
பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், 

டீசல் விலை
டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


உலக நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

 மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாத நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் முதலே, அவற்றின் விலையை உயர்த்திக் கொண்டே வருகின்றன.


நேற்று பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 83.63 ,

டீசல் விலை

 டீசல் விலை லிட்டர் ரூபாய் 78.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 


பெட்ரோல் விலை 25 நாளாக மாறுதல் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 4வது நாளாக இன்று ஏந்த மாறுதல் செய்யப்பட்டவில்லை
Read More

Tuesday, July 21, 2020

கருப்பர் கூட்டம் யூடுப் சேனலில் அணைத்து விடீயோக்களும் நீக்கம்!

July 21, 2020 0
கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்ததால் கருப்பர் கூட்டம் யூடுப் சேனலின் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கருப்பர் கூட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த சேனலில் உள்ள அனைத்து வீடியோக்கள் இந்து மதத்தை அவமதிக்கும் கருத்துக்களாக இருந்ததால் இந்த யூடூப் சேனலை முழுவதுமாக முடுக்க மத்திய குற்ற புலனாய்வு போலீசார் யூடுப் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் இன்று கருப்பர் கூட்டம் யூடுப் சேனலில் உள்ள  அணைத்தும் விடியோக்கள் சைபர் பிரிவு போலீசாரால் நீக்கப்பட்டுள்ளது. கருப்பர் கூட்டத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்த நிலையில் திமுக இதை மறுத்துள்ளது.


 
திமுகவில் உள்ள 1 கோடிக்கும் அதிகமானவர்கள் ஹிந்துக்கள், ஒரு மதத்தை அவமதிக்கும் எந்த ஒரு செயலையும் திமுக ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது.

Read More

தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள்; வங்கிகளை 5 ஆக குறைக்க அரசு திட்டம்?

July 21, 2020 0
நியூ டெல்லி: இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை  5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, சில வங்கிகளின் பங்குகளை தனியார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றன.


இந்தியாவில் வங்கிகளில் வாராக் கடன் பிரச்சனைகளில் நாளும் போதிய மூலதனம் இல்லாததால் வங்கிகள் சிரமப்பட்டு வருகின்றனர் . இந்த நிலையில் வங்கித்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் நலிந்த பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்கப்பட்டன. இது கடந்த ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போதைய நிலையில் வங்கிகள் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கி பாதி அளவுக்கு தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அங்கங்கு வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூசிஓ பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி, ‛இனிமேல் வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளதால், வங்கிகளின் பங்குகளை விற்க உள்ளதாகவும், நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்,' கூறியுள்ளனர்.

வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார் மயமாக்க கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

Friday, July 17, 2020

கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது..

July 17, 2020 0
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது என்ற உத்தரவால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் 128 நகர கூட்டுறவு வங்கிகள்  4  850 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் விவசாய கடன் மகளிர் சுய உதவி குழு கடன் மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கடன் சேவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது காரணமாக நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.கரோனா தோற்றால் பலர் வேலை இழந்துள்ள நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர் தற்போதைய சூழலில் பலரும் நகைகளை அடகு வைத்து செலவை சமாளித்து வருகின்றனர் எந்த காரணமும் இன்றி கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் அடகு கடைகளில் மக்கள் தற்போது நாடவேண்டியுள்ளது .
Read More

Thursday, July 16, 2020

12th result today 2020

July 16, 2020 0
+2 மதிப்பெண் இன்று வெளியிடப்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

பல நாட்களாக +12 மதிப்பெண் வெளியிடாத நிலையில் இன்று பிளஸ் டூ காண மதிப்பினை வெளியிடப்படும் என்பதை உறுதி அளித்துள்ளன.

+12 மதிப்பெண் பார்ப்பதற்கான லிங்க் இணையும் இந்த வலைதளத்தின் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு மதிப்பெண் பார்க்கத் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த வழிமுறையை பின் தொடரவும்.
  1. உங்களுடைய எக்ஸாம் நம்பர்
  2. உங்களுடைய டேட் ஆப் பர்த்
இது இருந்தால் போதும் உங்களுடைய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு ப்ளஸ் டூ ரிசல்ட்  இன்று திடீர் முடிவாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால் உங்கள் நண்பர்களுக்கு பிளஸ்டூ மதிப்பெண் தெரிந்து கொள்ள இந்த லிங்கினை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

     10.00 am வெளியிடப்படும்

Website link:Link 1

இதுபோன்ற பல செய்திகளையும் பல கல்வி சார்ந்த செய்திகளையும் பல வேலை சார்ந்த செய்திகளையும் இதில் அப்லோட் செய்யப்படும் ஆகையால் இந்த வலைதளத்தை பின் தொடரவும்.


உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தியை சேர் செய்யுங்கள்
Read More

Popular Posts

Subscribe Us