Today Medical Tips - Tech News

You Can Find All Information

Popular Posts

Thursday, May 27, 2021

Today Medical Tips


*இன்றைய மருத்துவம்

*உங்கள் நுரையீரல் நலமா?

*தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும் பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

*ஒரு காலில் மட்டும் வீக்கம், வலி என்று இருக்கின்றதா? உங்கள் காலில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த அடைப்பு சிறிது உடைத்து அந்த துகள் ரத்த ஓட்டத்தின் மூலமாக நுரையீரல் அடைந்து அங்குள்ள ரத்த குழாயினை அடைத்து கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம். மூச்சு விடுவதில் கடினம், நெஞ்சு வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

*உங்கள் நுரையீரலின் திறனை மேம்படுத்த மூச்சுப் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். பல்வேறு வகையான மூச்சுப்பயிற்சிகள் உள்ளன.

*உதரவிதான சுவாசம், இதழ்கள் குவிக்கும் சுவாசம், பிராணாயாமம் போன்றவற்றை நீங்கள் முயற்சிக்கலாம். மூச்சு சம்பந்தமான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் நுரையீரல் திறன் மேம்படும். இதனால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

*சரியான அளவு தண்ணீர் பருகுவது உடலின் மற்ற பகுதிகள் போல் நுரையீரலும் சிறப்பாக செயல்பட உதவும். எனவே உடல் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் நீர்ச்சத்துடன் இருப்பதால் நுரையீரலில் உள்ள ம்யூகோஸல் லைனிங் மெலிதாகி , நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும்.

*ஆம் , உங்கள் உட்காரும் நிலைக்கும், நுரையீரல் திறனுக்கும் தொடர்பு உள்ளது. சாய்வாக உட்கார்வதால் உங்கள் நுரையீரல் திறன் குறைகிறது. தவறான நிலையில் அமர்வதால் உங்கள் நுரையீரல் சுருங்கி சிறியதாக மாறுகிறது. எனவே உட்காரும்போது நேராக உட்காருங்கள்.

*ஒருவர் அதிக அளவு மன உளைச்சலில் இருந்தால் சதா சளி பாதிப்பு, கிருமி தாக்குதலுக்கு உள்ளாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

*நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்.

*ஆஸ்துமா தொல்லை இருந்தாலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

*இருமலில் ரத்தம் இருந்தால் உடனடி மருத்துவ கவனம் தேவை.

*திடீரென குரல் தடித்தோ, கரகரப்பாகவோ மாறினால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

*தொடர்ந்து எக்காரணமும் இன்றி பல வாரங்கள் மேல் கை வலி இருந்தால் மருத்துவ கவனம் தேவை.

*விரல் நகங்களில் நீல நிறம் தெரிந்தால் மருத்துவரை அணுகவும்.

*காரணம் இன்றி எடை குறைந்தாலும் நுரையீரல் பற்றிய கவனமும் தேவை.

*எப்பொழுதும் சோர்வாக இருந்தால் பல பரிசோதனை களோடு நுரையீரலுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.

*புகைப் பிடிப்பவராயின் முதலில் இந்த நொடியே அதனை விட்டு விடுங்கள்.

*பிளீச்சிங்பவுடர், தரைவிரிப்பு, வேக்கம் கிளீனர், வாஷ்பேஸின், வீட்டில் அடைந்த பகுதி, பூச்சுக் கொல்லிகள், பெயிண்ட் போன்றவை உங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பவை. அதனை ஜாக்கிரதையாக கையாளவும்.

*விரைவு தெளிவு எளிமை உங்கள்

Tamilbooster

No comments:

Popular Posts

Subscribe Us