கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது.. - Tech News

You Can Find All Information

Popular Posts

Friday, July 17, 2020

கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது..

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடலும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக்கூடாது என்ற உத்தரவால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் 128 நகர கூட்டுறவு வங்கிகள்  4  850 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் விவசாய கடன் மகளிர் சுய உதவி குழு கடன் மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கடன் சேவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது காரணமாக நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.கரோனா தோற்றால் பலர் வேலை இழந்துள்ள நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர் தற்போதைய சூழலில் பலரும் நகைகளை அடகு வைத்து செலவை சமாளித்து வருகின்றனர் எந்த காரணமும் இன்றி கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் தனியார் அடகு கடைகளில் மக்கள் தற்போது நாடவேண்டியுள்ளது .

No comments:

Popular Posts

Subscribe Us