சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31896
சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது திங்கட்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31896 அதிக அளவாக ராயபுரம் மண்டலத்தில் 5 ஆயிரத்து 716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் தண்டையார்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை 82 ஆக அதிகரித்துள்ளது தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 844 பேரும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 ஆயிரத்து 409 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் அண்ணாநகர் மண்டலத்தில் 3 ஆயிரத்து 150 பேரும் திருவிக நகர் மண்டலத்தில் 2922 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 60 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும் 40 விழுக்காட்டினர் பெண்கள் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment