🔴பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை - Tech News

You Can Find All Information

Popular Posts

Saturday, June 27, 2020

🔴பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை

சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான parentcircle  நிறுவனம் பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் சமீபத்தில் நடத்தியது. இதில் சென்னை மும்பை டெல்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர் அவர்களின் கருத்துக்கள் என்ன என்பதனைப் பார்க்கலாம் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. தென்மேற்கு பருவமழையால் தோற்று பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது மிகவும் சவாலான காரியம். குறிப்பாக பிளே ஸ்கூல் ஃப்ரீஸ்கூல் பிரைமரி ஸ்கூல் என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது.   பாடத்திட்டத்தின் அளவுகளை குறைக்கப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். கொரோனாவுக்கு பிந்திய நிலை காண விதிகள் வகுக்கப்பட வேண்டும் கல்வியாண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் இது போன்று பல்வேறு காரணங்களால் அக்டோபர் மாதம் வரை பள்ளி திறப்பது என்பது சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Popular Posts

Subscribe Us