கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் குறித்த நேரத்துக்குள் திறக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பிற வகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.கல்வி தொலைக்காட்சி மூலமாக பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணி நேரம் பாடங்கள் நடத்தப்படும்.இந்த நிகழ்ச்சியின்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். கல்வி தொலைக்காட்சி இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது
மேலும் தொடர் செய்திகளுக்கு மறக்காம நம்ம தமிழ் போஸ்டர் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க
நன்றி வணக்கம்
No comments:
Post a Comment