தேள் என்றால் என்ன?
தேள் என்பது கணுக்காலிகள் பிரிவை சேர்ந்த உயிரினமாகும். ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும் தேளின் வால் நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டுள்ளது.முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிக்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன. தேள்கள் பற்றிய தகவல்கள் அவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை நமக்குத் தெரியப்படுத்தி உதவு கின்றன. அப்படிப்பட்ட 15 தகவல்களைப் பற்றி இப்போது பார்ப்போம் .
இதுவரை அறிந்த வரையில் இவ்வுலகில் பதிமூன்று குடும்பங்களுடன் சுமார் 2000 வெவ்வேறு இடங்கள் உள்ளன. கிட்டதட்ட அனைத்து தேள்களுமே விஷத்தன்மை வாய்ந்தவை தான் என்றாலும் அவற்றில் சுமார் 25 தேள் இனங்கள் மட்டுமே ஒரு மனிதரை கொல்லும் அளவிற்கு அதிக விஷத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.
15 தகவல்கள்...
- தேள்கள் நீண்ட ஆயுள் காலத்தை கொண்டிருக்கவில்லை காடுகளில் வாழும் தேள்களின் சராசரி ஆயுட்காலம் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
- வெப்ப மண்டல மழை காடுகள் மலைகள் மற்றும் புல்வெளிகள் உள்ளிட்ட உலகின் எந்த ஒரு நிலப்பரப்பில் வாழும் திறனுடையது தேள்கள் அண்டார்டிகாவை தவிர்த்து மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.
- உணவு அரிதாக கிடைக்கும் சூழ்நிலைகளில் தேள்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தை குறைத்துக் கொள்ளும்.
- தேள்களால் ஒரு வருடம் வரை உணவின்றி உயிர் வாழ முடியும்.
- தேள்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. மிகச்சிறிய தேள்கள் இனங்கள் சுமார் 9 மில்லி மீட்டர் நீளம் கொண்டவை அதே நேரத்தில் மிகப்பெரிய தேள்கள் இனங்கள் சுமார் 20 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை.
- தேள்களுக்கு ஆறு முதல் பன்னிரண்டு கண்கள் வரை இருக்கின்றன. இருப்பினும் அவற்றின் பார்வை திறன் என்னவோ மிகவும் குறைவுதான் இதனை ஈடு செய்ய தேள்கலுக்கு அவற்றின் அடி வயிற்றின் அடிப்பகுதியில் pectines எனப்படும் உணர்ச்சி உறுப்புகள் உள்ளன.இந்த pectines பிற தேள்கள் விட்டுச்சென்ற வாசனை தடங்களையும் சுற்றியுள்ள காற்று இயக்கத்தையும் கண்டறிய உதவுகின்றன.
- தேள்கள் இரவு நேரத்தில் நடமாடும் உயிரினம் என்றாலும் அவை இரவு நேரத்தில்கூட உணவு தேடிச் செல்வதில்லை. மாறாக அவை அவற்றின் இறைஅருகே வரும் வரை காத்திருந்து பிடித்து உண்ணும் இயல்புடையவை விருப்ப உணவு சிலந்தி உள்ளிட்ட பூச்சியினங்கள் ஆகும்.
- தேள்ளின் குட்டிகள் காஸ் பிளைன்ஸ் என்று அழைக்கப் படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாயின் முதுகில் அமர்ந்து சவாரி செய்யும்.
- பெண் தேள் ஆண் தேள்களை விட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் பெண் தேள்கள் ஆண் தேள்களுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு ஆண் தேள்களைக் கொன்று தின்றுவிடும்.
- தேள்கள் எப்போதும் தங்கள் பிடிக்கும் இரையை முடிந்த வரை தங்கள் முன்புற கொடுக்கு களால் அடக்கி கொள்ளவே விரும்புகின்றனர். அது முடியாத பட்சத்தில் தான் பின்பகுதி வால் கொடுக்க இருக்கும் இடத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஏனெனில் ஒரு முறை விஷத்தை வெளியேற்றினால் புதிய விஷம் சுரக்க சுமார் ஒரு வாரகாலம் அல்லது அதற்கும் மேல் ஆகும். எனவே தேள்கள் தங்கள் விஷத்தைப் இழக்க விரும்புவதில்லை.
- உலகின் மிகவும் ஆபத்தான தேள்கள் இந்தியாவில் காணப்படும் செந்தேள்களும் இஸ்ரேலிய மஞ்சள் தேள்களும் கருதப்படுகின்றன.
- இவை கொட்டினால் தாங்க முடியாத அளவில் ஏற்படும் வலியைத் தொடர்ந்து மரணம் சம்பவிக்கலாம்.
- தேளின் விஷம் மருந்துத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேள்களுக்கு நிறைய தேவை இருப்பதால் அவை சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு மருந்து நிறுவனங்களிடம் விற்கப்படுகின்றன. உதாரணமாக பாகிஸ்தானில் உள்ள டாட்டா மாவட்ட விவசாயிகள் பிடித்துக் கொடுக்கும் ஒவ்வொரு 40 கிராம் அளவிலான தேள்களுக்கு சுமார் 7000 ரூபாய் வழங்கப் படுகின்றது.
- சீனாவின் சில பகுதிகளில் ஃப்ரைடு சிக்கன் விற்கப்படுவதை போல ஸ்கார்பியன் விற்கப்படுகின்றன. தேள்லை வறுத்து சாப்பிடுவது அவர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும் மேலும் சீன மருத்துவத்தில் தேள் ஒயின் வலி நிவாரணியாகவும் மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
- ஒரு தேள் அதன் முழுமையான வளர்ச்சியை அடைவதற்கு ஏழுமுறை தோல் உரிக்கிறது. தேள் அதன் தோலை உரித்த முதல் ஒரு மணி நேரத்தில் ஒரு சிறிய தாக்குதலையும் தாங்காது ஏனெனில் அவற்றின் புதிய பாதுகாப்பு தோல் கடினம்மாவதற்கு சிறிது நேரம் பிடிக்கும்
No comments:
Post a Comment