அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான சுவாரஸ்யமான எல்லை - Tech News

You Can Find All Information

Popular Posts

Wednesday, August 19, 2020

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான சுவாரஸ்யமான எல்லை

 கனடாவும் அமெரிக்காவும் பரப்பளவு அடிப்படையில் முறையே உலகின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய நாடுகளாக இருக்கின்றன. இந்த இரு நாடுகளும் 8891 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கின்றனர்.

   அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கனடா ஒரு எல்லையை பகிர்ந்து கொள்ள கனடாவின் 8 பிரதேசங்கள் அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றனர். இது போன்ற இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களையும் அமெரிக்கா கனடா இல்லை கொண்டிருக்கிறது. அவை என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.



AIRPORT BETWEEN TWO COUNTRIES


 ஒரு நாட்டின் எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையத்தின் ரன்வே முழுதுமாக அந்த நாட்டின் எல்லைக்குள் தான் அமைந்திருக்கும். அதுதான்  சரியானதும் பாதுகாப்பானதும் கூட ரன்வே  அடுத்த நாட்டின் எல்லைக்குள் எடுத்துச் சென்றால் அங்கிருக்கும் அந்நாட்டு ராணுவத்தினர் துவம்சம் செய்து விடுவார்கள். ஆனால் இதற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் இடையிலான எல்லை விதிவிலக்கு ஏனெனில் அமெரிக்கா கனடா எல்லையில் 6 விமான நிலையங்கள் இருக்கின்றன. அந்த விமான நிலையங்களின் ரன்வே கல் ஒரு நாட்டின் எல்லைக்குள் தொடங்கி மற்றொரு நாட்டின் எல்லைக்குள் முடிவடைகின்றன. இப்படிப்பட்ட எல்லை கடந்து போகும் விமான நிலைய ரன்வே கல் உலகில் வேறு எங்கும் இல்லை.


LONGEST UNPROTECTED BORDER 

நாடுகளின் எல்லை என்றாலே அங்கு கட்டாயமாக இருக்கும் தொல்லை. ஆனால் அமெரிக்கா கனடா எல்லையில் இல்லை எந்தவித தொல்லை. உலகிலேயே ராணுவ பாதுகாப்பு ஏதுமில்லாத மிக நீண்ட எல்லை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்துகொள்ளும் எல்லையாகும். அதே நேரத்தில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக மாமியார் வீட்டுக்குள் நுழைவது போல சுலபமாக எல்லை தாண்டி போக முடியாது. ஏனெனில் எல்லையில் கஸ்டம்ஸ்செக் பாயிண்ட் இருக்கின்றன. கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் முறையாக டாக்குமென்ட்களை சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்னர்தான் எல்லையை கடக்க முடியும். இல்லை என்றால் 5 ஆயிரம் டாலர்கள் அபராதமும் அல்லது சிறை தண்டனையும் கிடைக்கும்.


ILLEGAL TUNNEL

  குறைந்தது ஒரு சட்டவிரோத சுரங்க பாதையை கொண்டுள்ள உலகின் ஒரே எல்லை அமெரிக்கா கனடா எல்லைதான். எல்லை பாதுகாப்பு இல்லை என்பதால் சட்டவிரோத ஆசாமிகள் சுரங்கம் அமைத்து எல்லை கடக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு முறை மூன்று கனடியர்கள் 360 அடி நீளம் சுரங்கம் அமைத்து எல்லை தாண்டி போதைப்பொருள் கடத்திய கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயத்தில் அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் சட்டபூர்வமான சுரங்கப் பாதைகளும் பிரிவுகளும் இருக்கின்றன. உரிய அனுமதியோடு மக்கள் சுரங்கப் பாதை மற்றும் பிரிட்ஜ் மூலமாக இரு நாடுகளுக்கும் சென்று வரலாம். இப்படிப்பட்ட சுரங்கப் பாதைகளில் குறிப்பிடத்தக்கது DETROLT WINDSOR TUNNAI ஆகும். இது அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தையும் கனடாவின் ஒன்ராரியோ பிரதேசத்தையும் இணைகிறது. மற்றொன்று அம்பாசிடர் பிரிட்ஜ் நீண்ட ஆற்றுப் பாலம் இது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தையும் கனடாவின் ஒன்ராரியோ வையம் இணைக்கிறது.


ONE WAY BORDER CROSSING


 அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே 119 சட்டபூர்வமான BORDER CROSSING இருக்கின்றன. அவற்றில் இரண்டு BORDER CROSSING ONE WAY BORDER CROSSING  மட்டுமே இருக்கின்றன. அவை இண்டியானா மாகாணத்தில் சுருபுஸ்கோ மற்றும் நியூயார்க் ஆகும். இந்த இரண்டு BORDER CROSSING-கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய வழி வகுக்கின்றன. ஆனால் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் நுழைய முடியாது. அதே போல் அமெரிக்காவின் MAINE மாகாணத்தின் போட்பீல்டு நகரிலிருந்து கனடாவின் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்திலுள்ள போர்பல்செக்கு போக மட்டுமே முடியும். திரும்ப வர முடியாது.


NO TOUCHING ZONE

 

 அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லையில் அமைந்திருக்கும் காடுகளில் உள்ள மரங்களை ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வெட்டி 20 அடி அகலத்திற்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்த இடைவெளியானது a visibieline between friendly neighbours என்று இந்த இடைவெளி அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து பசுபிக் பெருங்கடல் வரை நீண்டுள்ளது. 1908 ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இன்டர்நெட்டில் பவுண்டரி கமிஷன் எனப்படும் ஆணையத்தின் மூலம் இந்த எல்லைக்கோடு பராமரிக்கப்படுகிறது.




இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த TAMILBOOSTER.IN வலைப்பக்கத்தை தொடர்ந்து ஆதரவு செய்யவும்.


No comments:

Popular Posts

Subscribe Us